தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மழை நீர் வடிகால் பணிகளில் குறை சொல்ல பலர் துடிக்கின்றனர்’ - தயாநிதி மாறன் - தயாநிதி மாறன்

"மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடக்கிறது என பலரும் குறை சொல்ல துடிக்கின்றார்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு" என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

’மழை நீர் வடிகால் பணிகளில் குறை சொல்ல துடிக்கிறார்கள்..!’ - தயாநிதி மாறன்
’மழை நீர் வடிகால் பணிகளில் குறை சொல்ல துடிக்கிறார்கள்..!’ - தயாநிதி மாறன்

By

Published : Jul 16, 2022, 8:52 PM IST

சென்னை:நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலத்தை மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நடைபாதை மேம்பாலத்தை ஆய்வு செய்த தயாநிதிமாறன்

ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், "நடைபாதை மேடை அமைத்து தர வேண்டும் என்ற பல நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக லயோலா கல்லூரியும் இலவசமாக நிலத்தை பகிர்ந்து அளித்துள்ளனர்.

நடைபாதை மேம்பாலத்தை ஆய்வு செய்தககன் தீப் சிங் பேடி, பிரியா

6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை மேடையை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வெளிவரும் மக்கள் சாலையை கடக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். மேலும், மாலை வேலைகளில் வாகன நெரிசலும் அதிகளவில் இருந்தது.

தற்போது எளிதில் மக்கள் சாலையை கடக்கும் வகையில் நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை மேடையில் சிறப்பம்சமாக சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என தெரிவித்தார்.

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தும் நகராட்சி மன்றமே நடக்காத அதிமுக அரசு இருந்தது. ஆனால் முதலமைச்சர் தற்போது நேரடியாக களத்தில் சென்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்து வருகிறார்” என்றார்.

தொடர்ந்து, “மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடக்கிறது என குறை சொல்ல அனைவரும் துடிக்குறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மழை நீர் வடிகால் பணியை முடித்து மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்': ஓபிஎஸ் உடல்நிலையை விசாரித்து முதலமைச்சர் போட்ட நங்கூர ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details