சென்னை:முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரையின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாவின் சாதனைகள் மற்றும் புகழ் எப்போதும் தேவைப்படுவதை விட தற்போதைய கால கட்டத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் அண்ணா.
திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்றுவதற்காக தீவிரமாக உள்ள நிலையில், அண்ணாவின் படம் தேவையில்லை. பாடம் தேவை. இந்திதான் இந்தியாவை இணைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உணர்கிறார். ஆனால் இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது.
திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிகள் படையெடுத்தால் அதன் மூலம் காளிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க:எம்பியின் பிஏ எனக்கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சுற்றிய நபர் கைது