தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்திய ஜி.கே.மணி..! - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறைக்கு வெளியிட்ட அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் ஜி.கே.மணி பேசியபோது அனைவரும் புன்னகைத்தனர்.

tamil nadu assembly  g k mani speech in tamil nadu assembly  cm stalin announcement for sports department  cm stalin speech at tn assembly  சட்டப்பேரவையில் கலகலப்பு  தமிழ்நாடு சட்டப்பேரவை  தமிழ்நாடு சட்டப்பேரவியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு  முதலமைச்சர் ஸ்டாலின்  சட்டப்பேரவையில் பேசிய ஜி.கே.மணி
ஜி.கே.மணி

By

Published : Apr 21, 2022, 4:06 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத்தொடர் இன்று (ஏப். 21) நடைபெற்றது. இதில், 110 விதியின் கீழ் விளையாட்டுத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு,

*ஒலிம்பிக் தங்கம் தேடுதல் (Olympic Gold Quest) என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. வடசென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வடசென்னைப் பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கு கையுந்துப்பந்து (Volleyball), இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basket ball), குத்துச்சண்டை (Boxing), கபடி (Kabaddi) மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு (Indoor Games) நவீன உடற்பயிற்சிக் கூடம் (Modern Gym) அமைக்கப்பட உள்ளது.

* அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.

* தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக்கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன்மூலம் விளையாட்டுத்துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைவும் வாய்ப்புகள் ஏற்படும்.

* சதுரங்க விளையாட்டில் (Chess) இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட கிராண்ட் மாஸ்டர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

* இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரமாண்டமாகத் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது.

* 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்குபெறவிருக்கிறார்கள்.

* 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளும் ஒரு சேர வளர வேண்டுமென்ற எனது எண்ணத்தின் வடிவமாக இத்தகைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் இளைய சக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த தமிழ்நாடு அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படும்.

முதலமைச்சரின் இத்தகைய அறிவிப்பினை, உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்று பேசினர். அப்போது பேசிய பாமக சட்டபேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, “நான் கூட கேள்வி நேத்தின் போது கைகளை தூக்கி விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளேன். ஆனால் பேரவைத் தலைவர் கொடுக்கவில்லை. கேட்டு கேட்டு பார்த்தேன், இன்று கேட்காமல் கிடைத்துள்ளது. எங்கள் எண்ணம் இது. முதலமைச்சர் அறிவிப்புகள் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கின்றன’’ என்று கூறினார். இவர் பேசிய போது அனைவரும் புன்னகைத்தனர். அப்போது சட்டப்பேரவை கலகலப்பாக இருந்தது.

இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details