தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஓய்வு பெற்றாலும் சிலைகளை காக்கும் பணியில் ஈடுபடுகிறேன்’- பொன் மாணிக்கவேல் - அறநிலைத்துறை

தான் ஐஜி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் பிரைவேட் காவலராக தொடர்ந்து சிலைகளை காக்கும் பணிகளை செய்து வருவதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தான் ஓய்வு பெற்றாலும் சிலைகளை காப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்
தான் ஓய்வு பெற்றாலும் சிலைகளை காப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்

By

Published : Nov 9, 2022, 11:02 PM IST

சென்னை:சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டிஎஸ்பி காதர் பாஷா வழக்கில் சிபிஐ, தன் மீது வழக்குப்பதிவு செய்து விட்டதாக தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு நான் அதிகாரியாக இருந்தபோது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி அசோக் நடராஜன் பதிவு செய்த அதே முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ மீண்டும் காதர் பாட்ஷா மீதும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்தது” என்றார்.

மேலும், டிஎஸ்பி காதர் பாட்ஷா என் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பொன் மாணிக்கவேல் தான், தீனதயாளனையும் தப்ப வைப்பதற்காக தன்னை சிக்க வைக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் எனவும், காதர் பாட்ஷா கூறியது அடிப்படை இல்லாதது என்றார். 1988ஆம் ஆண்டு முதல் தீனதாயளன் சிலை கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், தான் அதிகாரியாக வந்த பிறகு தான் கைது செய்தேன், ஆனால் தீனதயாளனை தான் தப்ப வைத்ததாக கூறுவது அபத்தம் என்றார்.

டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கில் தான் விசாரணை அதிகாரியோ, கண்காணிப்பு அதிகாரியோ இல்லை எனவும் விசாரணை அதிகாரி அசோக் நடராஜன் டிஎஸ்பி, எனவும் தனக்கு மேலே அப்போது அதிகாரியாக இருந்தவர் டிஜிபி பிரதீப் பி பிலிப் இருந்ததாகவும், இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பிரதீப் வி பிலிப்பையும் சிபிஐ விசாரிக்கட்டும் என்றார்.

துப்பாக்கி முனையில் சிலை கடத்திய டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்தது அப்போதைய டிஜிபிக்கு பிடிக்கவில்லை எனவும் எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கேட்டவரிடம் பேனாவால் தான் போட்டேன் என சொன்னேன் என பொன் மாணிக்கவேல் காமெடியாக கூறினார். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை யாரால் நடந்தது என கேள்வி எழுப்பிய அவர், ஜெர்மனியில் இருந்து சுபாஷ் கபூரை கொண்டு வந்து நான்கு வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது, தான் அதிகாரியாக இருக்கும்போது தான் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த வழக்கில் சாட்சிகளை விசாரித்து ஆதாரங்களை திரட்டி சிறப்பாக பணிபுரிந்த டிஎஸ்பி அசோக நடராஜனுக்கு உரிய கவுரவம் வழங்கப்படவில்லை. ஆனால் மரியாதை நிமித்தமாக கூட சுபாஷ் கபூருக்கு தண்டனை பற்றிய தகவல் தனக்கு தெரிவிக்கப்படவில்லை. சுபாஷ் கபூர் வழக்கில் தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை டிஜிபி அழைத்து வெகுமதி அளிக்கிறார். எனது கடமையை செய்ய வேண்டியது காவல் துறை பணி, சட்டத்தில் இது போன்ற பணிகளுக்கு வெகுமதி அளிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது.

வீரப்பனை சுட்டு பிடித்தவர்களுக்கு 700 காவல் துறையினருக்கு விருது கொடுத்தார்கள், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த டிஎஸ்பி அசோக் நடராஜனுக்கு சிறு அங்கீகாரம் கூட இல்லை. அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். எனக்கு விருதுகளோ அங்கீகாரமோ நான் கேட்கவில்லை ஆனால் அதில் நீண்ட காலம் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

அதே வேளையில், தீனதயாளன் வழக்கில் ஏன் தற்போது வரை இருக்கும் அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை? தீனதயாளன் வழக்கு உள்பட நான் விட்டு வந்த வழக்குகளில் இரண்டே முக்கால் வருடமாக ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. நான் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் பிரைவேட் காவலராக தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகிறேன். ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள சிவனடியார்கள் மூலம் கண்காணித்து அவர்களையும் ஒரு பிரைவேட் காவலராக மாற்றி சிலைகளை காப்பதற்கான பணியில் இறங்கியிருக்கிறேன்.

தான் ஓய்வு பெற்றாலும் சிலைகளை காப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்

தமிழ்நாடு கோயில்களில் உள்ள 3.5 லட்சம் சிலைகள் அறநிலைத்துறையால் பதிவு செய்யாமல் இருக்கிறது. சுமார் 2ஆயிரத்து 500 சிலைகள் வழக்குகளில் இருந்து மீட்கப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த கோயில்களுக்கு திருப்பிக் கொண்டு வைக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சவால்களை சிறப்பாக எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை - டிஜிபி பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details