தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய நிகழ்வுகள்

மே 20ஆம் தேதியின் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

By

Published : May 20, 2021, 8:22 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் செல்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.20) கோயம்புத்தூர் செல்கிறார்.

கேரளாவின் புதிய முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு!

பினராயி விஜயன்

கேரளாவின் புதிய முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று (மே.20) மதியம் 3.30 மணியளவில் பதவியேற்கிறார்.

18 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி!

கரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் 18 வயது மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே.20) தொடங்கி வைக்கிறார்.

சேலத்தில் இன்று முதல் காய்கறி சந்தைகள் மூடல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.20) முதல் காய்கறி சந்தைகள் மூடப்படவுள்ளது. அதற்கு பதிலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பராமரிப்புக்காகசுருளியாறு நீர்மின் நிலையம் மூடல்!

நீர்மின் நிலையம்

தேனி மாவட்டம் கம்பம் சுருளியாறு நீர் மின்நிலையம் இன்று (மே.20) முதல் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details