தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

etvbharat top 10 news
etvbharat top 10 news

By

Published : Jul 18, 2020, 6:56 PM IST

'பிளாக் ராக்' மால்வேர்: 337 செயலிகள் மூலம் பயனர்களின் தனியுரிமை தகவல்களுக்கு குறி!

சமூக வலைதளம், தகவல் பரிமாற்றம், டேட்டிங் உள்ளிட்ட 337 செயலிகளின் மூலம் பயனர்களின் தனியுரிமை தகவல்களைக் குறிவைக்கும் புதிய பிளாக் ராக் ஆண்ட்ராய்டு மால்வேரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

'டிக்டாக் அமெரிக்க நிறுவனமாகச் செயல்பட்டால் தடை இல்லை'

59 சீனச் செயலிகளைத் தடைசெய்தது மத்திய அரசு. இச்சூழலில் அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கின. இவ்வேளையில் டிக்டாக் தனது தாய் நிறுவனமான பைட் டான்ஸிலிருந்து வெளியேறி அமெரிக்க நிறுவனமாக மாற வேண்டும் என வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீட் அல்லாத கல்லூரி படிப்புகளுக்கு 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி: நீட் அல்லாத கல்லூரி படிப்புகளுக்கான விண்ணப்பத்தை வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்

தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மழைவாழ் மக்கள் - நிவாரணம் வழங்கிய திமுக எம்எல்ஏ

திருப்பூர்: மடத்துக்குளம் மலைவாழ் மக்களுக்கு எட்டு கிலோமீட்டர் அடர்ந்த மலைப் பகுதிக்குள் நடந்து சென்று திமுக எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் நிவாரணம் வழங்கினார்.

எல்லையில் ஆய்வுசெய்த ராஜ்நாத் சிங்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியிலுள்ள முக்கிய இடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

"இப்போ வீடே சிறை ஆயிடுச்சி"- 'மனிதன்' ஃபோட்டோசூட் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியின் ஃபோட்டோசூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகின்றன. ஐந்து மாதக் கால கரோனா ஊரடங்கில் வீட்டில் சிறைவாசியைப்போல் இருக்கும் சாமானியனின் நிலை குறித்து பிரதிபலிப்பதுபோன்று இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்தனர்.

'கப்பேலா' பட நடிகருக்கு விரைவில் டும் டும் டும்!

'கப்பேலா' பட நடிகருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'துப்பு கொடுத்ததால் கொன்றோம்' - சடலத்துடன் துண்டுச் சீட்டை விட்டுச்சென்ற நக்சல்கள்

ராஞ்சி: நக்சல்கள் குறித்து காவலர்களுக்கு துப்பு கொடுத்ததாகக் கூறி, 30 வயது இளைஞரை நக்சல்கள் சிலர் கடத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details