தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - chennai news

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @1PM
Top 10 news @1PM

By

Published : Oct 2, 2021, 1:07 PM IST

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

'இனி பழைய துரைமுருகனைப் பார்க்கப் போறீங்க; நான் உங்களுடைய அமைச்சர்!'

பழைய துரைமுருகன்போல ஒவ்வொரு வீடாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்து அக்குறைகளை நிவர்த்திசெய்வேன் என அமைச்சர் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!

வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வதுபோல என வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்துணவுத் திட்டத்தை பிச்சையெடுப்பதோடு ஒப்பிட்ட கருணாநிதி - நினைவுகூரும் கே.பி. முனுசாமி

காட்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட கே.பி. முனுசாமி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து பொய் கூறியே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது எனப் பேசினார்.

அன்றும், இன்றும், என்றும் கிங் மேக்கர் 'காமராஜர்'

சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர், அடுக்கு மொழியில் பேசுவதில் வல்லவர் அல்ல. ஆயினும் எதார்த்த பேச்சுக்கு சொந்தக்காரர். மொழி புரியாதவர்களும் காமராஜரின் பேச்சை நிதானமாக கேட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

15 நாள்களில் சென்னையில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல்

15 நாள்களில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை வைஷாலிக்கு திடீர் திருமணம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், ராஜா ராணி உள்ளிட்ட தொடரில் நடித்து பிரபலமானவரான வைஷாலி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை ஆணையர்

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கதர் உடைகளை உடுத்துவோம் நெசவாளர்களை உயர்த்துவோம் - மு.க ஸ்டாலின்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கதர் உடைகளை உடுத்துவோம் நெசவாளர்களை உயர்த்துவோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘நெல்சன் மீது நம்பிக்கையை விட அன்பு அதிகமாக இருக்கிறது’ - சிவகார்த்திகேயன்

டாக்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், நெல்சன் மீது தான் வைத்திருக்கும் அன்பினை நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details