தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - பகல் 11 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11AM
11AM

By

Published : Sep 21, 2021, 11:25 AM IST

1. மருத்துவப் படிப்பில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையோடு, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 20 விழுக்காடு வரை தனி ஒதுக்கீடு, வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

2. என்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர் - பொதுமக்கள் புகழாரம்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடையாறு தியோசோபிகல் சொசைட்டியில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

3. டாஸ்மாக் சுவருதான் வீக்கு... ஆனா லாக்கரு ஸ்ட்ராங்கு!

பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் டாஸ்மாக் கடையின் சிசிடிவியை உடைத்து, சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. லாக்கரை (பெட்டகம்) உடைக்க முடியாததால் மூன்றரை லட்சம் ரூபாய் பாதுகாப்பாக உள்ளது.

4. உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: பேச்சுவார்த்தை தோல்வி

உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

5.நீ வேணா சண்டைக்கு வா... போதையில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட காவலர்

சென்னை: அம்பத்தூரில் குடிபோதையில் தலைமைக் காவலர் ஒருவர் தெருவில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6. பண மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது வழக்கு - நேரில் ஆஜராக கூறி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. சென்னை ஐஐடியில் எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு

சென்னை ஐஐடியில் எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ. பட்டப்படிப்பானது வேலை செய்யும் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் அக்டோபர் 19ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

8. ஒரேநாளில் உயர்ந்த தங்கம் விலை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்றைய விலையிலிருந்து 112 ரூபாய் அதிகரித்துள்ளது.

9. சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் - நாக்பூரில் மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை நாக்பூர் ரயில்வே காவல் துறையினர் மீட்டனர்.

10. வந்துவிட்டது துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக்பாஸ்: குஷியில் ரசிகர்கள்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details