தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 25, 2021, 11:02 AM IST

1. டோக்கியோ ஒலிம்பிக்: தோல்வியைத் தழுவிய சானியா, ரெய்னா இணை

டோக்கியோ ஒலிம்பிக்கில், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் செட்டில் வெற்றி பெற்ற சானியா மிர்ஷா, அங்கிதா ரெய்னா இணை அடுத்த இரண்டு செட்டில் தோல்வியைத் தழுவினர்.

2. நாடற்றவர்களின் குரல் கேட்கட்டும் - அகதிகள் ஒலிம்பிக் அணி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது நாட்டுக்கொடியை ஏந்தி ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டபோது, 8.42 கோடி அகதிகளின் பிரதிநிதிகளாக அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தி அணிவகுத்தனர்.

3. ராமதாஸின் 82ஆவது பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸூக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

4.பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?

மாமல்லபுரம் அருகே பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

5. மகாராஷ்டிரா வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 59 பேர் மாயம்

மகாராஷ்டிராவில் தொடர் மழை, நிலச்சரிவு காரணமாக 82 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 59 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

6. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 36ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

7. திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் - விவசாயிகள் வேதனை

நன்னிலம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 15 நாள்களுக்கும் மேலாக நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

8. ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை - உதவியவர்களுக்கு குவியும் பாராட்டு

திருவாரூர் அருகே பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, ஆம்புலன்ஸிலேயே அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

9. அப்டேட் இல்லையென்றால் வங்கிக்கணக்கு முடக்கம் என்னும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள் - காவல் துறை எச்சரிக்கை

பத்து நிமிடங்களில் அப்டேட் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரக்கூடிய மெசேஜ் லிங்கைத் தொட வேண்டாம் என சென்னை காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

10. 'அனைத்திலும் ஆளுநர் தலையிட்டால் மாநில அரசு எதற்கு' - மணீஷ் சிசோடியா காட்டம்

டெல்லி அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் ஆளுநர் அதிகார வரம்பு மீறி தலையிடுகிறார் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details