தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - top 10 news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11AM
11AM

By

Published : Jun 29, 2021, 10:57 AM IST

1. மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

கடந்த மே 10 முதல் ஜூன் 26ஆம் தேதிவரை பயன்படுத்தப்படாத, சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஏழைக் குழந்தைகளுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதம் - அண்ணாமலை

நீட் தேர்வு வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளதாகவும், அது ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் என்றும் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3. திருப்பதியைப்போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாறும் - அமைச்சர் எ.வ. வேலு

திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகளை, கான்கிரீட் சாலையாக மாற்றும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

4. கொடைக்கானல் பள்ளி மாணவன் தோப்புக்கரணத்தில் சாதனை

கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவர், ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

5. 'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அறிவியல்பூர்வமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டுமென பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

6.திருமணத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை: ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை!

திருவண்ணாமலையில் திருமணத்திற்கு முன்பாக பெற்ற ஆண் குழந்தையை மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன் உள்பட நான்கு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7.viral video: 3 அடி பாம்பை விழுங்கிய 4 அடி பாம்பு

ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டம் பாலகதி கிராமத்தில் 4 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று 3 அடி நீளமுள்ள நாகத்தை விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
8.வில்சன் கொலை வழக்கு: குற்றவாளியைக் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த வில்சன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுள் ஒருவரான சியாபுதீனை, காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

9.சொந்தமாக ரெஸ்டாரண்ட் தொடங்கிய பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

10.'விக்ரம்' படத்தில் இணைந்த 'கைதி' பிரபலம்

கமல் ஹாசனின் 232ஆவது திரைப்படத்தில் தான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details