தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Jul 8, 2021, 7:18 AM IST

திமுகவில் இணையும் மநீம மகேந்திரன்:

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் இன்று (ஜூலை 8) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளார்.

மகேந்திரன்

ரஷ்யா செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர்:

அரசு முறைப்பயணமாக இன்று (ஜூலை 8) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா செல்லவுள்ளார். அங்கு, இந்தியா-ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர்

சென்னை திரும்பும் ரஜினி:

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினி இன்று (ஜூலை 08) சென்னை திரும்புகிறார்.

ரஜினி

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்:

கரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று (ஜூலை 08) காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ

மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள்:

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 8) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details