தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday. - ஈடிவி பாரத் இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Jul 7, 2021, 7:39 AM IST

மத்திய அமைச்சரவை கூட்டம்:

பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூலை 07) காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

அமைச்சரவை கூட்டம்

குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை திறந்துவைக்கும் ஸ்டாலின்:

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தின் கட்டடத்தை இன்று (ஜூலை 07) காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.

ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தொடக்கம்:

கரோனா தொற்று பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தாமதமான நிலையில் இன்று (ஜூலை 07) தொடங்குகிறது.

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் பகுதிகள்:

மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூலை 07) தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அசாமில் பொது முடக்கம் அறிவிப்பு:

கரோனா தொற்று பரவல் காரணமாக அசாமின் 7 மாவட்டங்களில் இன்று (ஜூலை 07) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details