தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - அதிமுக முன்னாள் அமைச்சர்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Jul 11, 2021, 7:09 AM IST

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்:

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூலை 11) திமுகவில் இணைகிறார்.

தோப்பு வெங்கடாசலம்

கர்நாடக புதிய ஆளுநர் பதவியேற்பு:

கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக இன்று (ஜூலை 11) தாவர்சந்த் கெலாட் பதிவியேற்கிறார்.

தாவர்சந்த் கெலாட்

சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்:

சென்னையில், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (ஜூலை 11) முதல் 45 தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தடுப்பூசி

பால் விலை உயர்வு:

டெல்லி என்சிஆர் பகுதிகளில் இன்று (ஜூலை 11) முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மதர் டய்ரி (Mother Diary) நிறுவனம் தெரிவித்துள்ளது.

பால் விலை

மழை பெய்யக்கூடிய பகுதிகள்:

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,

மழை

ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் , புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை சானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details