தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.
ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Jul 3, 2020, 6:35 PM IST

1.நீட், ஜே.இ.இ தேர்வு ஒத்திவைப்பு?

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக நீட், ஜே.இ.இ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பொறுப்பு

அண்மையில் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

3.சில மாற்றங்களுடன் சர்வதேச விமான சேவை ரத்து - விமானப் போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி : சர்வதேச விமான சேவை ரத்து ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சூழ்நிலை கருதி சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

4.இன்டெல் முதலீடு: அம்பானி காட்டில் மழை; ஜியோ தளத்தில் குவியும் முதலீடுகள்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தளத்தில் 0.39 விழுக்காடு பங்குகளை வாங்க, இன்டெல் ரூ. 1894.50 கோடியை முதலீடு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்டெல்-ஜியோ ஒப்பந்தத்தின் மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் 12ஆவது முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

5.வணிகர் இல்லாத கடைகள் : ஐஸ்வாலில் இருந்து சுவிட்சர்லாந்துவரை

எந்த ஒரு வியாபாரத்திலும் நம்பிக்கையும் நாணயமும் நுகர்வோர் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதற்கு நேர்மாறாக, வாடிக்கையாளர்களின் நாணயத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் ஆளில்லா கடைகள் நேர்மையைக் கைவிடுவதில்லை என்பதற்கு வாழும் உதாரணங்களாய் இருக்கின்றன என இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் அத்தனு பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

6.பாகிஸ்தானில் பேருந்து மீது மோதிய ரயில் : 29 சீக்கியப் பயணிகள் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள ஷேக்குப்புரா பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் 29 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

7.இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

டெல்லி: இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் கரோனாவால் 20 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8.'எனது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து, உதவி செய்த ஈடிவிக்கு ரொம்ப நன்றி'

புதுக்கோட்டை: தனக்கு தூய்மைப் பணி கிடைத்தால் கூட போதும், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கிடைத்தாலும் தன்னோட குடும்பத்தின் பசியை ஆற்றிவிடுவேன் என ஈடிவி பாரத்திடம் வேதனை தெரிவித்த தனலெட்சுமி என்ற பெண்ணுக்கு, தமது செய்தியின் எதிரொலியாக தற்போது தற்காலிக அரசுப் பணி கிடைத்துள்ளது.

9.தோனி தலைமையில் விளையாட விருப்பம் - ஸ்ரீசாந்த்

கொச்சி: ஐபிஎல் போட்டிகளில் தோனியின் தலைமையில் அல்லது ஆர்.சி.பி-யில் விளையாட விரும்புவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் 2021 ஏலத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

10.உலகக் கோப்பை மேட்ச் ஃபிக்சிங்: விசாரணையில் சங்கக்காரா!

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராவிடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details