தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2020, 7:27 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7  மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

1. தமிழ்நாட்டில் 6,426 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 2.34 லட்சத்தை தாண்டியது

2.'சுற்றுச்சூழல் அவசர சட்டம் மக்களுக்கு எதிரானது' - முத்தரசன் குற்றச்சாட்டு!

கோவை: சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள், மக்களுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

3. சர்வதேச புலிகள் தினம்: கோவை வனக்கோட்டத்தின் மீது கூடுதல் கவனம் தேவை?

சர்வதேச புலிகள் தினமான இன்று (ஜூலை 29) புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வது, புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் அவசியத்தை பற்றி இத்தொகுப்பு விவரிக்கிறது.

4. 'நிபந்தனைகளுடன் முகக் கவசம், மருத்துவக் கண்ணாடிகளை ஏற்றுமதி செய்யலாம்' - மத்திய அரசு

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், மாதந்தோறும் 4 கோடி இரண்டடுக்கு, மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக் கவசங்களையும், 20 லட்சம் மருத்துவ கண்ணாடிகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

5. தினம் 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - முதலமைச்சர் தகவல்

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

6. 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நாட்டின் சுற்றுச்சூழலுக்கு விரோதமானது' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

திண்டுக்கல்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நாட்டின் சுற்றுச்சூழலுக்கு விரோதமானது என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.

7. இருளர் மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: விழுப்புரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இருளர் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

8. நண்பர்களுடன் போட்டி போட்டு குடிக்கும் அமலாபால்!

ஆண் நண்பர்களுடன் அமலாபால் போட்டி போட்டு மது அருந்தும் காணொலி காட்சியை அமலாபால் தனது இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

9. இந்திய அணியின் அடுத்த தோனி யார் ? ரெய்னா பதில்

டெல்லி: எம்.எஸ். தோனியின் குணநலன்கள் இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிடம் ஏராளமாக உள்ளன என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

10. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் யார்?

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு 117 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்வேளையில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக காணொலி காட்சி வாயிலாக நேர்காணல் நடைபெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details