தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm - அர்மீனிய பிரதமருக்கு கரோனா

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm

By

Published : Jun 1, 2020, 7:01 PM IST

Updated : Jun 1, 2020, 7:07 PM IST

விவசாயிகள் கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் - மத்திய அரசு

டெல்லி: விவசாயிகள் கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

'தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்'

மதுரை: தூய்மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், அவற்றை பணியாளர்கள் முறையாக பயன்படுத்துகின்றனரா என அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரோனா அச்சம்: அனுமதியிருந்தும் இரு விழுக்காடு ஊழியர்களோடு இயங்கும் டைடல் பார்க்!

சென்னை: அரசு அனுமதி அளித்தும் அதிகமான ஊழியர்களின்றி டைடல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்து கட்சியும் எனக்கு வேண்டும் - பிரதமர் பாராட்டிய மோகன்!

மதுரை: ’அனைத்துக் கட்சியும் எனக்கு முக்கியம்தான்’ என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டுப் பெற்ற மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள ஏரி , குளம் , கண்மாய்களில் மீன்களை வளர்க்க ஏலம் விடும்போது தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கா கெளுத்தி மீன், தெளி மீன் உள்ளிட்ட மீன்களை வளர்க்க தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: தீவிர சிகிச்சையில் பள்ளி மாணவி!

மயிலாடுதுறை: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திரைப்படமாகிறது“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாறு

சென்னை: இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவாகிறது.

'மத்திய அரசின் முடிவு மேக்-இன் இந்தியா திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும்'

சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கான மத்திய அரசின் வரைவுத் திட்டம், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கடுமையாகப் பாதிக்கும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

லாக்டவுனுக்குப்பின் முதன்முறையாக தலைகாட்டிய எலிசபெத் மகாராணி

லண்டன்: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகப் பலத்த பாதுகாப்பிலிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத், ஊரடங்கிற்குப்பின் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டார்.

அர்மீனிய பிரதமருக்கு கரோனா!

யெரவன்: அர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யன் குடும்பத்தினருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jun 1, 2020, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details