தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Jul 30, 2020, 8:58 PM IST

1.எழுவர் விடுதலையில் ஆளுநர் மௌனத்துக்கான காரணம் இதுதான்! - முன்னாள் சிபிஐ அலுவலர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆளுநர் இதில் மௌனம் சாதித்துவரும் நிலையில், ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் இது குறித்து சில முக்கிய தகவல்களை நமது ஈடிவி பாரத்துக்கு பகிர்ந்துள்ளார்.

2. களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் - வழக்கு பதிந்த மனித உரிமை ஆணையம் !

சென்னை : கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து உணவு விநியோகம் செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3.ஜூலை 30 பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ச்சி; அனில் அம்பானி சொத்துக்கள் முடக்கம்!

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.06 புள்ளிகள் குறைந்து 37,736.07 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

4. அனில் அம்பானியின் ரூ.2,892 கோடி சொத்துக்கு செக்!

அனில் அம்பானி குழுமத்தின் இரண்டு ஆயிரத்து 892 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமையகத்தை கையகப்படுத்த யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

5. திமுக செயலாளர் கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்வது போன்ற அம்சங்களை, உள்ளடக்கிய புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. போலி சான்றிதழ்களைப் பயன்படுத்திய கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உயர் பதவிக்காக போலி கல்விச் சான்றிதழ்களை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

7. "தலைவன் பிறந்து இருக்கிறான்"- நடிகர் ரமேஷ் திலக்

நடிகர் ரமேஷ் திலக் தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

8. வெப் சீரிஸாக உருவாகும் 'வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்'

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெப் சீரிஸ் ஒன்று தயாராக உள்ளது.

9. பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை - உயர் நீதிமன்றம்

சென்னை: கரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10. ஐபிஎல் காரணமாக இந்திய வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தி வைப்பு?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுக்கு பிசிசிஐ சர்பில் அடுத்த மாதம் பயிற்சி நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details