தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM

By

Published : Jul 30, 2020, 7:31 PM IST

1. தமிழ்நாட்டில் இன்று5,864 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 30) ஒரே நாளில் 5, 864 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் நடத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

3. மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளவேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

4. முதலமைச்சருடன் ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சந்திப்பு

சென்னை: ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

5. 'பாப்டே உயிருக்கு ஆபத்து' Z ப்ளஸ் பாதுகாப்பில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி!

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுத் துறை தகவலால், அவரின் z பிரிவு பாதுகாப்பை z ப்ளஸ் பாதுகாப்பாக ஆக உயர்த்தி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

6. பெரம்பலூரில் கடல்சார் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை

பெரம்பலூர்: புவியியல் வரலாற்று களமாக திகழும் பகுதிகளைப் பாதுகாத்து அவற்றை திறந்தவெளி அருங்காட்சியமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு...

7. ரூ.6.76 கோடிக்கு மோசடி பில்கள் தயாரித்த கடற்படை அலுவலர்கள்!

டெல்லி: மேற்கு கடற்படைக்கு ஐ.டி வன்பொருள் வழங்குவதற்காக நான்கு கடற்படை அலுவலர்கள் ரூ 6.76 கோடிக்கு ஏழு மோசடி பில்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.

8. இந்திய சீன மோதல்: அரிய தாதுக்கள் காரணமா?

கிழக்கு லடாக்கில் மிகவும் மதிப்புமிக்க தாதுக்கள் நிறைந்திருப்பதற்கான அறிகுறி உள்ளதாக ஓ.என்.ஜி.சி-இன் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்...

9. பிரதமர் வருகையை முன்னிட்டு உ.பி.யில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் அயோத்தி வருகை, சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாளத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10. தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் வர்ணாசிரம கோட்பாட்டை திணிப்பதுதான்’ - திருமாவளவன்

சென்னை: அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details