தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - etv bharat top10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9pm
Top 10 news @ 9pm

By

Published : May 28, 2020, 8:58 PM IST

‘உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்’ - ஸ்டாலின் காட்டம்

சென்னை: கரோனா விவகாரத்தில் மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க நினைப்பதே அவர்களுக்குச் செய்யக்கூடிய மாபெரும் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்!

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் 1320 மெகாவாட் அளவுள்ள தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்தியப் பிரதேச மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

எல்லை விவகாரம் இந்தியாவுக்கு தண்ணீரை நிறுத்திய நேபாளம்

இந்தியா - நேபாளம் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், பிகாரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு வரவேண்டிய நதிநீரை நேபாளம் தடுத்து நிறுத்தியுள்ளது. முன்னதாக, லிபுலேக் எல்லைப் பகுதியில் புதிய சாலைப் போக்குவரத்தை இந்தியா தொடங்கியது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு உருவாகியுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: தலைமைச் செயலாளர் வெளியீடு

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், தேர்வு நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பேரூர் கழக பொருளாளர் கட்சியிலிருந்து நீக்கம்

தேனி: போடி அருகே இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோம்பை பேரூர் அதிமுக கழக பொருளாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

போலீசாரை மிரட்டி ஆடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் கைது!

சென்னை: மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளரை பற்றி அவதூறாக பேசியும் மிரட்டியும் ஆடியோ வெளியிட்ட சமூக ஆர்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெப் சீரிஸில் வடிவேலு?

தனது தனித்துவமான காமெடிகளால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட நடிகர் வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ரஷ்ய மொழியில் ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2'

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2' திரைப்படம் குறித்து ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்

ஸ்ரீநகர்: பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை குறிவைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். வாகனத்தில் 40 முதல் 45 கிலோ வரை வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் ட்வீட்களை உண்மையானதா என்று சரி பார்த்தது தவறு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details