தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - ஐஸ்வர்யா ராய்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

By

Published : May 24, 2020, 8:57 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பினராயி 75: இந்திய இடதுசாரி அதிகார அரசியலின் ஒரே ஆயுதமான 'பிரியப்பட்ட சகாவு'

மார்க்ஸின் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும் பிரியப்பட்ட சகாவு பினராயி விஜயன் இன்று தனது 75ஆவது வயதில் ஆர்ப்பாட்டமில்லாமல் காலத்தின் வாழ்த்துகளுடன் அடியெடுத்து வைக்கிறார்.

அணு ஆயுத திறனை அதிகரிக்க வடகொரியா திட்டம்: ராணுவ அலுவலர்களுடன் கிம் ஆலோசனை

பியொங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத திறனை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

காலநிலை அறிக்கை தருகிறது உமாங் செயலி!

காலநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள உமாங் செயலியில் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்துள்ளது. இதன்மூலம் புயல், சுற்றுலா முன்னறிவிப்பு, எச்சரிக்கைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் பிறந்த நாளுக்கு அன்பு ததும்பும் பதிவிட்ட ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், தன் தாயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நினைவுகளை பகிர்ந்த மில்லர்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான தனது பயணம் குறித்தும், அணியின் கேப்டன் குறித்தும் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் பகிர்ந்துள்ளார்.

கரோனா பாதிப்பு - தூத்துக்குடியில் புற ஊதா கதிர்கள் கொண்டு சுத்தம் செய்யும் கருவிகள்

தூத்துக்குடி: முடி திருத்தம் கடையில் புற ஊதா கதிர்கள் கொண்டு கருவிகளை அதன் தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர்.

கரோனா எதிரொலி: வேலைதேடும் முறையில் ஏற்பட்ட மாற்றம்

மும்பை: கரோனா பாதிப்பின் தாக்கம் இந்தியாவின் வேலைவாய்ப்பில் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வருகிறது ஜியோமார்ட்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் அங்கமான ஜியோ தளத்தின் மூலம் ஃபிளிப்கார்ட், அமேசான் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ மார்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்கும் கண்ணாடிப் பெட்டி!

வாஷிங்டன்: மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க, அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் பாதுகாப்பான கண்ணாடிப் பெட்டி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details