தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top10 news  7pm
etv bharat top10 news 7pm

By

Published : May 27, 2020, 6:49 PM IST

நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்

இந்தியா - சீனாவுக்கு இடையே எல்லையில் பூசல் நிலவிவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தற்போதுள்ள மாவட்டதிலேயே தேர்வு

டெல்லி: 10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அவர்கள் உள்ள மாவட்டத்திலேயே தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 817 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 817 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வரைபட விவகாரம் பின்வாங்கிய நேபாளம்

இந்தியா - நேபாளம் எல்லை பகுதியில் உள்ள லிபுலேக் பகுதி குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவிவருகிறது. லிபுலேக் பகுதியில் புதிய சாலை வழித்தடத்தை இந்தியா தொடங்கிவைத்தது.

உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் கொடுமை!

பாட்னா: சிறப்பு ரயிலில் பிகாருக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் மனதை நிலைகுலைய செய்கிறது.

'மதுபானக் கடைகளில் விலைப் பட்டியல் ஒட்டப்படுகிறதா?' - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: மதுபானக் கடைகளில் விலைப் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானம் விற்கப்படுகிறதா? அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறதா? என்று டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபரில் ஐபிஎல் தொடர்?

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் நடப்பு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரியில் நுழைந்த பிரகாஷ் ராஜ்

சில மாதங்களுக்கு முன்னர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் 'இன் டு தி வைல்ட்' என்னும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதேபோல் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ், டிஸ்கவரியில் எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

டிக்கெட் ரத்தாகியுள்ள ஏர் இந்தியா பயணிகளுக்கு நற்செய்தி

டெல்லி: கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்து ரத்தாகியுள்ள ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போனை வெளியிட்ட சியோமி

சியோமி நிறுவனம் ‘ரெட்மி இயர்பட்ஸ் எஸ்’ என்ற வயர்லெஸ் இயர்போனை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details