தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 6:45 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7pm
etv-bharat-top10-news-7pm

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வரம்பு மீறிய காதல்... 9 பேர் கொடூர கொலை - கொலையாளி பிடிபட்டது எப்படி?

கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் மீது காதல். அந்த காதல் தடைபடவே, மனதில் ஏற்பட்ட மாறுதல்களால் பெண்ணுடன் சேர்த்து குடும்பத்தினருடன் தீர்த்துகட்ட திட்டம் தீட்டிய சஞ்சய் குமார். அதன்படி 9 கொடூர கொலைகளை நிகழ்த்தி தற்போது காவல் துறையினர் பிடியில் சிக்கியுள்ளார் கொலையாளி.

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது, அதன் தரம் கண்டிப்பான முறையில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபிலிருந்து சொந்த மாநிலம் சென்ற 4 லட்சம் மக்கள்

சண்டிகர்: நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரூ .21.8 கோடி செலவில் பஞ்சாபிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள அரசின் உதவியை நாடும் மகாராஷ்டிரா

மும்பை: கரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் மகாராஷ்டிர அரசு, கேரள அரசிடம் உதவிகோரி அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பியுள்ளது.

OTT-யில் வெளியாகுமா அனுஷ்காவின் நிசப்தம்? - தயாரிப்பாளரின் விளக்கம்

அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நிசப்தம்' படம் OTTயில் வெளியாகும் என கூறப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் விளக்கமளித்துள்ளார்.

இப்போதே சூடுபிடித்த ஐசிசி தேர்தல்!

ஐசிசி தலைவருக்கான தேர்தல் தொடர்பாக இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்களிடையே பணப்பரிமாற்றம் நடந்ததாக தற்போது ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகர் அச்சம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமேசானுக்கு அள்ளிக்கொடுக்கும் சேவை இதுதான்!

அமேசான் நிறுவனம் தனது க்ளவுட் ஸ்டோரேஜ் சேவையான Amazon Web Services (AWS) மூலம் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 10 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.

வூஹானில் அதிகரிக்கும் கரோனா தொற்று

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details