தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7pm
etv-bharat-top10-news-7pm

By

Published : May 24, 2020, 6:29 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

'10ஆம் வகுப்புத் தேர்வு எழுதினால் அனைவரும் பாஸ் தானா?' - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கத் தடை!

சென்னை: தமிழ்நாட்டில் பணிக்காலம் முடிவடைந்த பேராசிரியர்களை மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கக் கூடாது என உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பினராயி 75: இந்திய இடதுசாரி அதிகார அரசியலின் ஒரே ஆயுதமான 'பிரியப்பட்ட சகாவு'

மார்க்ஸின் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும் பிரியப்பட்ட சகாவு பினராயி விஜயன் இன்று தனது 75ஆவது வயதில் ஆர்ப்பாட்டமில்லாமல் காலத்தின் வாழ்த்துகளுடன் அடியெடுத்து வைக்கிறார்.

ஒடிசாவில் ஆன்லைன் மது விற்பனை தொடக்கம்!

புவனேஷ்வர்: வீடுகளுக்கு சென்று மதுபானங்களை டெலிவரி செய்யும் வகையிலான இணையதளத்தினை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

விமானம், ரயில் பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள்!

டெல்லி: இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விமானம், ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் : மைக்கேலிடம் விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை!

டெல்லி : ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணையை மேற்கொள்ள அமலாக்க இயக்குநரகத்திற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனமாடிய வேதிகா - வைரலாகும் வீடியோ

'மாஸ்டர்' திரைப்படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடிகை வேதிகா நடனமாடியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உமிழ் நீர் தடை பந்துவீச்சாளர்களின் தரத்தை மேம்படுத்தும்: ஜோ ரூட்...!

கிரிக்கெட் பந்துகளில் உமிழ் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க ஐசிசி கிரிக்கெட் கமிட்டிக் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், உமிழ் நீர் தடை பந்துவீச்சாளர்களின் தரத்தை மேம்படுத்தும் என ஜோ ரூ ட் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமருக்கு பிணை!

போர்ட் மோரெஸ்பி : ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பப்புவா நியூ கினியா தீவின் முன்னாள் பிரதமர் பீட்டர் ஓ நீல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details