தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7pm
etv-bharat-top10-news-7pm

By

Published : May 23, 2020, 6:29 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 759 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 759 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: முன்னாள் முதலமைச்சரின் மனு தள்ளுபடி

டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தண்டனைக்குத் தடை கோரிய முன்னாள் முதலமைச்சர் கோடாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?

டெல்லி: வெளிநாட்டுப் பயணிகள் விமான போக்குவரத்து சேவை ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மீதான வழக்கில் சட்ட நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு!

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட நடவடிக்கையை நிறுத்தி வைக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் போதை மிட்டாய்கள் பறிமுதல் - 3 பேர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள வடமாநிலத்தவர் வைத்திருந்த கடை, குடோனில் குவியல் குவியலாக போதை மிட்டாய்கள், புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

1.9 கோடி குழந்தைகள் ஆம்பன் புயலால் பாதிப்பு - யுனிசெப் கவலை

ஹைதரபாத்: இந்திய-வங்க தேச எல்லையைக் கடுமையாகத் தாக்கியுள்ள ஆம்பன் புயல் காரணமாக சுமார் 1.9 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மன உளைச்சல் காரணமாக நடிகை வாணி ஸ்ரீயின் மகன் தூக்கிலிட்டு தற்கொலை!

பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்குலி, ஜெய் ஷாவின் பதவியை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிசிசிஐ தலைவர் கங்குலி அதன் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரது பதவியை மூன்று ஆண்டுகள் நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இ.எம்.ஐ. நீட்டிப்புச் சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா?

டெல்லி: இரண்டாவது முறையாக இ.எம்.ஐ. காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை கடன் தவணை விவகாரத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details