தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-pm
etv-bharat-top10-news-7-pm

By

Published : May 30, 2020, 6:46 PM IST

'ஏமாற்றத்திற்குரிய ஓராண்டு' - மோடி 2.0வை விமர்சித்த காங்கிரஸ்

டெல்லி: ஏமாற்றம், நிர்வாகத் தோல்லி, வருத்தம் நிறைந்த ஆண்டாக மோடியின் ஓராண்டு ஆட்சிக்காலம் இருந்ததாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருவருக்கு கரோனா உறுதி!

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் இரண்டு அலுவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

'சென்னை, அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கக் கூடாது'

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கக் கூடாது என மருத்துவ வல்லுநர் குழுவினர் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

உழவர் கடன் அட்டைகள் - வங்கிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!

சென்னை: விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவக் கல்வியில் ஓபிசிக்கு ஒதுக்கீடு இல்லாதது சமூக அநீதி - டிடிவி தினகரன்

சென்னை: மத்திய அரசு மருத்துவக் கல்வியில் ஓபிசிக்கு ஒதுக்கீடு வழங்காதது சமூக அநீதி செயல் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 109ஆக அதிகரித்த கரோனா உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கிய கரண் ஜோஹர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இயக்குநர் கரண் ஜோஹர் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

ஃபோர்ப்ஸில் இடம்பிடித்த சோலோ கிரிக்கெட்டர் விராட் கோலி!

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில், கடந்த ஒரு ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர்களின் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

ஜி7 நாடுகளின் சந்திப்பை புறக்கணித்த ஜெர்மன் அதிபர்!

பெர்லின் : அமெரிக்காவில் உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details