தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-pm
etv-bharat-top10-news-7-pm

By

Published : May 29, 2020, 6:51 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 874 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 874 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டும் தான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் காலமானார்

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி மாரடைப்பு காரணமாக காலமானார். முன்னதாக, புதன்கிழமை இரவு அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது.

'அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் சிறப்பு ரயிலில் பயணியுங்கள்' : பியூஷ் கோயல்

டெல்லி: கடுமையான வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தியாவசியமான தேவைகளாக இருந்தால் மட்டும் ரயிலில் பயணிக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

14 வயதில் குரோர்பதி வெற்றியாளர், 33ஆவது வயதில் காவல் கண்காணிப்பாளர்

14 வயதில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்று சாதனை படைத்த ரவி மோகன் சைனி, தற்போது தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

செல்ஃபி எடுக்க சரியான முறை இருக்கிறதா என்ன? - கஜோல்

பாலிவுட் நடிகை கஜோல் எடுத்த தலைகீழான செல்ஃபி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனியால்தான் 2 முறை டாஸ் போடப்பட்டது - சங்ககரா

2011 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார்.

உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெனால்ட் நிறுவனம், அந்நாட்டில் 4,600 ஊழியர்களையும், அதை தவிர்த்து பிற நாடுகளில் பணி செய்யும் ஊழியர்கள் 10,000 பேரை வேலையை விட்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடைவிதிக்கும் சீனா!

பெய்ஜிங்: பன்றிக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதற்கு சீன அரசு தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details