தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am

By

Published : May 24, 2020, 6:48 AM IST

தமிழ்நாட்டில் மே 25 ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரமலான் பண்டிகை, திங்கள்கிழமையன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 200ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் மையங்களை 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்கள் இனி 'தூய்மைப் பணியாளர்கள்' - தமிழ்நாடு அரசு ஆணை!

சென்னை: துப்புரவுப் பணியாளர்களை 'தூய்மைப் பணியாளர்கள்' ( Cleanliness Workers ) என அழைக்க வேண்டி தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி விலக்கு வணிகர்களுக்கு உதவாது!

டெல்லி: மத்திய அரசு அறிவித்த ஆறு மாத ஜிஎஸ்டி விலக்கு வணிகர்களுக்கு உதவாது என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) முன்னாள் தலைவர் நஜிப் ஷா தெரிவித்துள்ளார்.

ஜூம் செயலியின் 5.0 பதிப்பு: பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் பயனர்கள் மொபைலில்!

தனியுரிமை தகவல்களை திருடுவதாக ஜூம் செயலிக்கு தடைவிதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வேளையில் பலதரபட்ட பாதுகாப்பு வளையங்களுடன் தனது 5.0 எனும் புதிய பதிப்பை பயனர்களுக்கு மே 30ஆம் தேதி முதல் வழக்கவுள்ளது அமெரிக்காவின் ஜூம் நிறுவனம்.

கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது; கஷோகியின் காதலி திட்டவட்டம்

இஸ்தான்புல்: பிரபல செய்தியாளர் ஜமால் கஷோகியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவரது காதலியான ஹாடைஸ் சென்கிஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிகாரச் சுரண்டல், மக்கள் கிளர்ச்சி - 'அறம்' குழுவின் 'க/பெ ரணசிங்கம்' டீஸர்

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் 'க/பெ ரணசிங்கம்' இத்திரைப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் தான் காரணம்’ - கேரி கிர்ஸ்டன்!

ஒரு அணியின் வெற்றியானது தனிப்பட்ட வீரராலோ அல்லது அணியினராலோ கிடைப்பது அல்ல, அது ஒரு பயிற்சியாளரின் புரிதலுக்கு கிடைக்கும் வெற்றி என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

வந்துவிட்டது ரியல்மி நார்சோ 10ஏ: ஃபிளிப்கார்ட், ரியல்மி தளத்தில் பதிவு செய்யலாம்!

தேசிய தொழில்நுட்ப தினமான மே 11ஆம் தேதி இந்தியாவில் வெளியான ரியல்மி நார்சோ 10ஏ திறன்பேசியை, இணைய வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட், ரியல்மி நிறுவனத்தின் பிரத்யேக தளமான realme.com ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 சவாலை எதிர்கொள்வது எப்படி? நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்ப் பிரத்யேகப் பேட்டி

கரோனா பெருந்தொற்றால் இந்தியா சவாலான சூழலை சந்தித்துவரும் நிலையில், நோயை எவ்வாறு எதிர்கொள்வது என வேலூர் சி.எம்.சி மருத்துவமணையைச் சேர்ந்த முன்னணி நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்ப் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் மேற்கொண்ட பிரத்யேக உரையாடல் இதோ...

ABOUT THE AUTHOR

...view details