தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am

By

Published : May 20, 2020, 6:49 AM IST

இந்தியா, ரஷ்யா, பிரேசிலில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று.....பீதியில் உலக நாடுகள்

இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிவேகமாக அதிகரித்து வருவது மற்ற நாடுகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

'மலேரியாவுக்கான மருந்தை எடுத்து வருகிறேன்' - ட்ரம்ப்

வாஷிங்டன் : கரோனா வைரஸிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள மலேரியா நோயைக் குணப்படுத்த உதவிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை, தான் உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இயலாமையை மறைக்க அமெரிக்கா எங்கள் மீது பழி சுமத்துகிறது- சீனா

பெய்ஜிங் : அமெரிக்கா தன் இயலாமையை மறைக்க கரோனா வைரஸ் பேரிடருக்கு தாங்கள் தான் முழு பொறுப்பு என பழி சுமத்தி வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

வேலையின்மை, பொருளாதார மந்தநிலை நீண்டகாலம் நீடிக்கும்: உலக பொருளாதார மன்றம்

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார சரிவும், வேலையின்மையும் நீண்ட காலம் நீடிக்கும் என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டம் - 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்கள் வாங்கும் பனி நிறுத்திவைப்பு

டெல்லி: 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் துவங்க இருக்கும் நிலையில், மோடி அறிவித்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக இந்திய விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வாய்ப்புகள், வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு - தமிழக அரசு

ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு பங்கேற்க விண்ணப்பம் - தமிழக அரசு

60 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் - 6 பேர் கைது!

புதுக்கோட்டை: திருமயம் அருகே கள்ளநோட்டுக்களை அச்சடித்து, அதனை புழக்கத்தில் விட்ட ஆறு பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ரூ. 65 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

கடனுக்கு ஈடாக வைத்த ஆவணங்களை திருப்பித்தர கையூட்டு பெற்ற வங்கியாளர் கைது

சென்னை: கடன் பெற்றபோது அதற்கு ஈடாக கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க ரூ. 15 ஆயிரம் கையூட்டாக கேட்ட வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'சிகரெட்டை வைத்து பழத்தை வெட்டுங்க' - டிப்ஸ் கொடுத்த 'துப்பாக்கி' வில்லன்

சிகரெட்டின் வாய்ப் பகுதியைப் பயன்படுத்தி, எலுமிச்சை பழத்தை, நடிகர் வித்யூத் ஜம்வால் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேகபந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் மேம்பட உதவியது இவரே - கோலி!

2013ஆம் ஆண்டிலிருந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும்போது இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் முன்னேற்றம் அடைந்ததற்கு பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த ரகுதான் முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details