தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2020, 3:51 PM IST

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-4-pm
etv-bharat-top10-news-4-pm

கரோனா பாதிப்பால் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் திட்டம்

ஈரோடு: கரோனா பாதிப்பால் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ரூ.2000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்களை விற்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்கத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழ்நாடு நிதித் துறை அறிவித்துள்ளது.

நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்... நீங்கள்? - பொன்முடி சவால்!

விழுப்புரம்: திமுகவினர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுகவின் மூத்தத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. பொன்முடி கூறியுள்ளார்.

'திருடனுக்குத் தேள்கொட்டியது போல... பதற்றத்தில் பொய் கூறிவரும் திமுகவினர்!'

திருவாரூர்: 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடாது. பதற்றத்தில் திமுகவினர் பொய் கூறிவருகின்றனர்' என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

முன்னாள் பாக். பிரதமர் நவாஸுக்கு எதிராகக் கைது ஆணை...!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

கரோனா ரத்த மாதிரிகளை ருசித்த குரங்கு: காணொலி வைரல்

லக்னோ: மீரட் நகரின் மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் (தீநுண்மி) ரத்த மாதிரிகளை குரங்கு தூக்கிச் சென்று சாப்பிட்ட காணொலியால் குடியிருப்புவாசிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் விஜய்க்கு ஆண் குழந்தை - ட்விட்டரில் அறிவித்த நடிகர் உதயா

இயக்குநர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது சகோதரரும் நடிகருமான உதயா சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.

ஃபோர்ப்ஸில் இடம்பிடித்த சோலோ கிரிக்கெட்டர் விராட் கோலி!

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில், கடந்த ஒரு ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர்களின் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

அரசின் மூன்று வேளாண் சீர்திருத்தங்களை விட நிலச் சீர்திருத்தம் முக்கியம் - வேளாண் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா

ஹைதராபாத்: "அரசு அறிவித்துள்ள மூன்று நடவடிக்கைகளைவிட பிரதானமாக, நிலச் சீர்திருத்த நடவடிக்கையைதான் நான் கருதுகிறேன். நிலச் சீர்திருத்தம் என்பதை மேற்கொள்ளாமல் கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்க வழியில்லை" - வெங்கடேஷ் ஆத்ரேயா சிறப்பு நேர்காணல்.

'வரவேற்கும், உணவு வழங்கும்'... நெதர்லாந்து ரோபோக்கள்!

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் உள்ள உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு கரோனா அச்சம் நீக்குவதற்காக ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details