தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 9:51 AM IST

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-am
etv-bharat-top10-news-10-am

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்: மேதாக் மாவட்டத்தில் விவசாய ஆழ்துளை கிணற்றில் நேற்று விழுந்த மூன்று வயது சிறுவன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று உயிரிழந்தார்.

சமய மாநாடு விதிமீறல்கள் தெரிந்தே மீறப்பட்டன - டெல்லி காவல் துறை

டெல்லி: ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எங்களின் சட்டப்பூர்வமான அறிவுறுத்தல்களை வேண்டுமென்றே புறக்கணித்தனர் என்றும், அவர்களின் அலட்சியம் நோய்ப்பரவ காரணமாக இருந்தது என்றும் டெல்லி காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.

பதஞ்சலி மருந்துகளைப் பயன்படுத்த அனுமதி?... உயர்மட்ட விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

போபால் : கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீது பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தி பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், அதுகுறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் கோரிக்கை

டெல்லி: மருத்துவர்கள், மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் தொடங்கிய திருப்பதி கோயில் லட்டு விற்பனை!

சித்தூர்: நீண்ட நாட்களாக லட்டு விற்பனையை நிறுத்திவைத்திருந்த திருமலை - திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் லட்டு விற்பனையைத் தொடங்கியுள்ளது.

ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு - உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மே 29ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தேனியில் சட்ட கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: தேனியில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான மதிப்பீடுகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

பட்டியலின இளைஞனுடன் காதல்: மகளைக் கொன்ற தந்தை விடுதலை!

திருவனந்தபுரம்: சொந்த மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தையை கேரள நீதிமன்றம் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பயிற்சியில் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்த மெஸ்ஸி அடித்த சூப்பர் கோல்!

லா லிகா தொடருக்காக பயிற்சி மேற்கொண்ட போது தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி அடித்த கோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

'வங்கியில் கடன் வாங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை!'

டெல்லி: பல சலுகைகளை அறிவித்த ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் வழங்காதது ஏன் என ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரேடை கேள்வியெழுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details