தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am - தீண்டாமை பார்க்கும் கடைகள்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம்

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am
10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am

By

Published : May 20, 2020, 10:00 AM IST

இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; ஒடிசாவில் 102 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று

புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று கரையைக் கடக்கும் நிலையில் ஒடிசாவில் 102 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசிவருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

சுமார் 100 புலம்பெயர்ந்த தொழிலார்கள் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைப்பு

கண்ணூர்: கரோனா பாதிப்பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கும் சூழலில் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்ற 100 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், அவர்கள் தங்கியிருந்த முகாமுக்கே மீண்டும் காவல் துறையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த இந்த நிதி திட்டத்தால் ஒரு பயனும் இல்லை- குமுறும் மாநில அரசுகள்

டெல்லி: கரோனா பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதியளிப்பதாக கூறி மாநில அரசுகளை பிச்சைக்காரர்களை போல நடத்துவதாக தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

வைரஸை செயலிழக்கவைக்கும் யுவி பெட்டி - அசத்திய கோவை மாணவர்கள்

கோவை: வைரஸை செயலிழக்க வைக்கும் வகையில் அல்ட்ரா வயலட் என்ற புற ஊதாக் கதிர்களைச் செலுத்தும் பெட்டியை வடிவமைத்துள்ளனர் கோவை தனியார் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவர்கள். இது குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பினைக் காணலாம்...

மது அருந்தி தொடர்ந்து தகராறு செய்த மகனை கொன்றவர் கைது!

விருதுநகர்: நாள்தோறும் மது அருந்தி வீட்டில் தகராறு செய்துவந்த மகனை கொன்ற தந்தையைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

'சிகரெட்டை வைத்து பழத்தை வெட்டுங்க' - டிப்ஸ் கொடுத்த 'துப்பாக்கி' வில்லன்

சிகரெட்டின் வாய்ப் பகுதியைப் பயன்படுத்தி, எலுமிச்சை பழத்தை, நடிகர் வித்யூத் ஜம்வால் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'உழவர்களின் அடிமடியில் கை வைத்தால் மின்மாற்றியில் கை வைத்ததாகி விடும்'

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை, அரசு ரத்து செய்ததையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தீண்டாமை பார்க்கும் முடிவெட்டும் கடைகள்!

பெங்களூரு: பட்டியலின மக்களைக் கண்டால் முடி வெட்டும் கடை முதலாளிகள் உடனே கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று விடும் அவலம் கர்நாடகாவில் நிகழ்ந்து வருகிறது.

வேலையின்மை, பொருளாதார மந்தநிலை நீண்டகாலம் நீடிக்கும்: உலக பொருளாதார மன்றம்

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார சரிவும், வேலையின்மையும் நீண்ட காலம் நீடிக்கும் என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

'மலேரியாவுக்கான மருந்தை எடுத்து வருகிறேன்' - ட்ரம்ப்

வாஷிங்டன் : கரோனா வைரஸிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள மலேரியா நோயைக் குணப்படுத்த உதவிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை, தான் உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details