தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம் - etv bharat top ten news

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news
etv bharat top ten news

By

Published : Jan 25, 2021, 3:20 PM IST

வாக்குச்சீட்டு துப்பாக்கி குண்டை விட வலிமையானவை - ஆப்ரஹாம் லிங்கன்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

தமிழக மீனவர்களை பாதுகாக்க தனிப்படை அமையும் - திருமாவளவன்

சென்னை: தமிழக மீனவர்களை பாதுகாக்க தனிப்படை அமையும் எனவும்; இதற்கு வைகோ உறுதுணையாக இருப்பார் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

கப்பல் ஆற்று ஊரணியை கடந்து உடலை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்

ராமநாதபுரம்: சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் கப்பல் ஆற்று ஊரணியை கடந்து உடலை எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்கிறது.

விவசாயிகள் பேரணியில் துப்பாக்கி சூடு நடந்தால் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: விவசாயிகள் பேரணியில் துப்பாக்கி சூடு நடந்தால் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

’காங்கிரசுடன் கூட்டணி பேச இது நேரமல்ல’ - கமல் ஹாசன்

சென்னை: காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பதை மதிப்பதாகவும் அவர்களுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமில்லை எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல் துறையினர்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல் - வைரமுத்து!

சென்னை: தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல் என ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்தது குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் இட வசதியின்றி இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

செங்கல்பட்டு: மாம்பாக்கம் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

லடாக் விவகாரம் - சீனாவுடன் 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியா!

டெல்லி: இந்தியா-சீனா இடையே நேற்று (ஜன.24) நடந்த 9ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை 15 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

மெக்சிகோ அதிபருக்கு கரோனா

மெக்சிகோவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details