தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்.
ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Jul 21, 2021, 3:18 PM IST

நான் டிக் டாக் அல்ல டிக் டோக்!

இந்தியாவில் மீண்டு(ம்) புதிய பெயரில் டிக் டாக் செயலி களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.

'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள் தொழிற்கல்விப் படிப்புகளில் வழங்கப்பட வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

நீயா, நானா? அடித்துக் காட்டிய கோயில் பூசாரிகள்!

மிர்சாபூரில் கோயில் பூசாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார், ரேஷன் கார்டு இணைப்புக்கு காலஅவகாசம்!

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கேரள அரசியலில் கால்பதித்த முதல் திருநங்கை தற்கொலை!

கேரள தேர்தலில் களமிறங்கிய முதல் திருநங்கையும், ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸ் நேற்று (ஜூலை 20) தற்கொலை செய்துகொண்டார்.

பவானி ஆறு இருந்தும் பலனில்லை: குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்

ஈரோட்டில் மேல்நிலைத் தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகளாகியும் குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனவும் நகரின் நடுவே பவானி ஆறு ஓடியும் பலனில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்த ஹாக்கி வீரர்கள் விழிப்புணர்வு

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்களை தங்கம் வெல்ல ஊக்கப்படுத்தும்விதமாக, கோவில்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர்கள் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.

மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஐ.சி.எம்.ஆர். முக்கியத் தகவல்

குழந்தைகளுக்குக் குறைந்தளவே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்தியாவில் தொடக்கப்பள்ளிகளைத் திறக்கலாம் என ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) தெரிவித்துள்ளது.

கர்நாடக காங்கிரசுக்கு ராகுல் அறிவுரை

கர்நாடக காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் உள்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒருங்கிணைந்து செயல்பட ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details