தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm

By

Published : Jun 6, 2021, 3:05 PM IST

'மலையாளத்தில் பேசக் கூடாது' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

செவிலியர் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்று அனுப்பிய சுற்றறிக்கையை டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

'செம்மொழியான தமிழ்மொழியே!'

இந்திய அரசால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

'நீச்சல் உடையில் கர்நாடக கொடி' - ஒரு வடு ஆறுவதற்குள் இன்னொரு வடு

நீச்சல் உடையில் கர்நாடக மாநில கொடி, முத்திரையைப் பதித்து விற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு அம்மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை - உறுப்பினர்கள் நியமனம்

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன்.6) ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் 847 பேருக்கு கறுப்புப் பூஞ்சை உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை 847 பேர் கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HBD பாவனா: என்றென்றும் 'சுசி'யின் நினைவில்...

இன்று 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை பாவனாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

'பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி

முகக் கவசம் அணியாமல் சென்ற தனது மகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்ததால் ஆவேசமடைந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் காவலரைக் கடுமையாகப் பேசும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details