தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 3 PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm

By

Published : Jun 5, 2021, 3:20 PM IST

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய நீதிபதி குழு - முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர்

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு வரும் 7-06-2021 முதல் 14-06-2021 காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'தையல் மெஷினே வாழ்க்கையாயிரும்: அதனால படி' - நரிக்குறவர் பெண்ணுக்கு அமைச்சர் உதவி

தையல் மெஷின் கேட்டு மனு கொடுத்த பெண்ணின் மேற்படிப்புக்கு உதவுவதாக அமைச்சர் சிவசங்கர் வாக்குறுதி அளித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவாகத் தொடங்க பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குட்டீஸ் உடல்நிலையைக் கண்காணிக்கும் கலர்புல் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

GOQii நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ஸ்மார்ட் வைட்டல் ஜூனியர்' ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்: காங்., சார்பில் மரியாதை

சென்னை: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிபின் 126ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை, திருவல்லிக்கேணி டாக்டர் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

டவுசர் அணிந்து செய்தி வாசித்த பிபிசி தொகுப்பாளர்

பிபிசி செய்தித் தொகுப்பாளர் ஒருவர் ஷார்ட்ஸ் அணிந்து செய்தி வாசிக்கும் காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.

'ப்ளூ டிக்' நீக்கப்பட்ட விவகாரம்: சரணடைந்த ட்விட்டர்!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் திருப்பி அளித்துள்ளது.

ராமநாதபுரத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!

ராமநாதபுரம்: கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்: காங்., சார்பில் மரியாதை

சென்னை: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிபின் 126ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை, திருவல்லிக்கேணி டாக்டர் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details