தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 7, 2021, 3:36 PM IST

முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் நியமனம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, கரோனா நிவாரண நிதித் தொகையாக ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதலமைச்சர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்... கண்கலங்கிய துர்கா!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை மு. கருணாநிதி, திமுக கட்சியின் நிறுவனர் அண்ணா ஆகியோர் சமாதி அமைந்திருக்கும் மெரினா கடற்கரைக்கு மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.

சொன்னதை செய்யுங்கள்! திமுகவுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: மதுக்கடைகளை மூட வேண்டிய கோரிக்கை புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரண நிதி: 2 கோடி ரூபாய் வழங்கிய விராட் - அனுஷ்கா ஜோடி!

கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 2 கோடியை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

நான் திராவிடன் - அண்ணா வழியில் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரங்களை மாற்றியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை!

திருச்சி: மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், வேப்பேரி பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி... கண்கலங்கிய மு.க ஸ்டாலின்!

சென்னை: கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details