தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : May 3, 2021, 3:32 PM IST

ரங்கசாமியை ரவுண்ட் கட்டும் பாஜக?

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், முதலமைச்சர் பதவியை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

கரோனா தொற்று, கடன் சுமை, பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

கரோனா தொற்று, கடன் சுமை, பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' - வெற்றிக்கு முன்பும் பின்பும்!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

'மூன்று இடத்தில் திமுக; மூன்றாம் இடத்தில் நாதக' - சிவகங்கை முழு விபரம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நேற்று (மே 2) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் நடைபெற்றது. இதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பில் சுமார் 3 ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 67 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

'கரோனா பேரிடரை ஸ்டாலின் ஒழிப்பார்' - பாலகிருஷ்ணன்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'சிறப்பான வகையில் திமுகவின் ஆட்சி நடக்கட்டும்' - மதுரை ஆதீனம் வாழ்த்து

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி!

புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

தந்தை வழியில் தமிழை பாதுகாக்க வேண்டும் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இமயம்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தா வீரர்களுக்கு கரோனா...இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா அணியின் 2 வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details