தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 25, 2021, 3:20 PM IST

சித்திரைத் திருவிழா: மீனாட்சி சொக்கநாதர் வீதி உலா

மதுரை: மீனாட்சி கோயிலில் சித்திரைத் திருவிழா 11ஆம் நாள் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை வீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

வளிமண்டல சுழற்சி: ஏப்ரல் 28ஆம் தேதிவரை லேசான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றுமுதல் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் துணை நிற்போம் - பாகிஸ்தான்

கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்புக்குள்ளான இந்தியாவுடன் பாகிஸ்தான் துணை நிற்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மே 3 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லி: நாளையுடன் தலைநகர் டெல்லியில் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நமது பொறுமையைச் சோதிக்கிறது - பிரதமர் மோடி கவலை

கோவிட்-19 இரண்டாம் அலை நாட்டு மக்களின் பொறுமையைச் சோதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

மின்விசிறியில் கண்டம் : அச்சத்தில் கரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்!

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், கரோனா தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர், தலைக்கு மேலுள்ள மின்விசிறி வித்தியாசமாக சுற்றுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர், எனக்கு கரோனாவை கண்டு பயமில்லை, இந்த மின்விசிறியை கண்டால்தான் பயமாகவுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப். 24) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்?

நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில், இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நோ மாஸ்க் நோ டிஸ்டன்ஸ்: முன்னாள் எம்எல்ஏ வீட்டு நிகழ்ச்சியால் 200 பேர் மீது வழக்குப்பதிவு!

பாட்னா: பிகாரில் ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்எல்ஏ முன்னா சுக்லாவின் இல்ல விழாவில், கரோனா விதிமுறைகளைத் துளி அளவுகூட பின்பற்றாதது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு

18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கான முன்பதிவு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details