தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம் - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

etv-bharat-top-ten-news-three-pm
etv-bharat-top-ten-news-three-pm

By

Published : Feb 11, 2021, 2:41 PM IST

தேர்தல் திருவிழா2021: 2ஆவது நாளாக சுனில் அரோரா ஆலோசனை!

சென்னை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப். 11) இரண்டாம் நாளாக தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், உள் துறைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டும் - குடும்பத்தினர் கோரிக்கை

சேலம்: மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

காதலிக்கச் சொல்லி பள்ளி மாணவியை கட்டாயப்படுத்திய இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: காதலிக்கச் சொல்லி பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

சென்னை: அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே இடித்துத் தள்ளும்படி அரசு அலுவலர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தை அமாவாசை: மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தியாகராஜ சுவாமி கோயிலில் திரண்ட மக்கள்

திருவாரூர்: தை அமாவாசையை முன்னிட்டு தியாகராஜ சுவாமி கோயில் குளத்தில் பொதுமக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

'பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்குகிறது' - ராஜ்நாத் சிங்

சீன எல்லையில் பதற்றமான சூழலைத் தணிக்கும் விதமாக பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்

எல்லைப் பகுதியான உரி அருகே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டார்.

பிரதமர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி ஆறாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கெட்டிக்காரன் பொய் 8 நாள்தான் நிற்கும் - பட்ஜெட் குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்

கெட்டிக்காரன் பொய் எட்டு நாள்தான் நிற்கும் என மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துப் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடங்கியது!

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details