தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : Jul 17, 2021, 7:16 PM IST

லாரியை துரத்திய நாய்... லாரிக்குள் ஆடு... நண்பேண்டா...

தன்னுடன் வளர்ந்த ஆட்டை விட்டுப் பிரிய முடியாமல் நாய் ஒன்று லாரியைத் துரத்திச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சென்னையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களிடம் 3.35 கோடி அபராதம் வசூல்!

சென்னை: மே மாதம் தொடங்கி நேற்று முன்தினம் (ஜூலை 15) வரை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத ஆறாயிரத்து 668 நிறுவனங்களிடமிருந்தும், 33 ஆயிரத்து 208 தனி நபர்களிடமிருந்தும் மூன்று கோடியே 35 லட்சத்து ஆறாயிரத்து 790 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னைவாசியாக மாறிய மதராஸி: அது நடந்தது இந்நாளே!

மெட்ராஸ் என அழைக்கப்பட்டுவந்து தமிழ்நாட்டின் தலைநகர் 'சென்னை' எனப் பெயர் மாற்றம் கண்டது 1996 ஜூலை 17 ஆகும்.

நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழ்நாடு கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கான கருத்துக்கணிப்பில் 87.1% பேர், நீட் தேர்வு வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாக்க முக்க பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ’குட்டி மயில்’ ஜான்வி!

12 ஆண்டுகளுக்கு முன் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான தமிழ்ப் பாடலான ’நாக்க முக்க’ பாடலுக்கு, நடிகை ஜான்வி கபூர் தன் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ பகிர்ந்துள்ளார்.

குழந்தைத் திருமணம் எங்கு நடந்தாலும் வழக்கு - அமைச்சர் அதிரடி

குழந்தைத் திருமணம் எங்கு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற முதியோருக்கு அன்பு காட்டும் 'அடைக்கலம்' - இளைஞர்கள் உருவாக்கிய சரணாலயம்

உறவினர்களால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற முதியோருக்கு அன்பு காட்டி 'அடைக்கலம்' என்ற பெயரில் இல்லத்தை உருவாக்கி, மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வத்துடன் மனிதநேய சேவைபுரிந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி

புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.

தூண்டில் வளைவு சேதம்: மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், கோவளத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக இங்குள்ள தூண்டில் வளைவு சேதமடைந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

3,800 டாலர்கள் பறிப்பு: ஈரானிய கொள்ளையர்கள் உள்பட 9 பேர் கைது

மத்திய காவல் துறையினர் எனக் கூறி 3800 டாலரைப் பறித்துச் சென்ற ஈரானிய கொள்ளையர்கள் ஆறு பேர் உள்பட ஒன்பது நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details