தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : Jun 11, 2021, 7:29 PM IST

’நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துரிதகதியில் நடவடிக்கை’ - அமைச்சர் உறுதி

சென்னை: நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்த இணையவழி சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பல்வேறு கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

கரோனா பாதித்தவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரை!

டெல்லி: கரோனா தொற்று பாதித்தவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை என, மத்திய அரசிடம் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.

'பல்முனை நடவடிக்கையால் படிப்படியாக குறையும் கரோனா' ராதாகிருஷ்ணன்!

பல்முனை நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மம்தாவை கரம்பிடிக்கும் சோசலிசம்: இணையத்தை கலக்கும் திருமண அழைப்பிதழ்

சமூக வலைத்தளங்களில் மணமகன் சோசலிசம், மணமகள் மம்தா பானர்ஜி என்ற திருமண அழைப்பிதழ் வைரலாகியது பின், கம்யூனிசம், லெனினிசம், மார்க்ஸிசம் என அடுத்தடுத்து வெளிவரும் சித்தாந்த மனிதர்களும், அந்த பெயர்களின் காரணத்தையும் இத்தொகுப்பில் காண்போம்.

நீட் தேர்வின் பாதிப்பை ஆராய குழு: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கான குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ராஜன் நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

விளையாட்டு வீரரின் நிலமோசடி வழக்கு: தொடர் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

சர்வதேச தடகள விளையாட்டு வீரர் அளித்த நிலமோசடி புகார் மீதான புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முழு ஊரடங்கால் வேலூரில் குறையத் தொடங்கும் கரோனா பாதிப்புகள்

வேலூர்: முழு ஊரடங்கு, கரோனா முகாம்கள் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்பதிவு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்ற ஐந்து பேர் கைது!

முதுகுளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்ற ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details