தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 am - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : Jun 8, 2021, 7:26 PM IST

’மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி வழங்குக’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

கரூர்: மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வழங்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

'மக்களை தேடி காவல் துறை' திட்டத்தை தொடங்கி வைத்தார் தென்காசி மாவட்ட புதிய எஸ்பி

தென்காசியில் 'குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் எவ்வித சமரசமுமின்றி நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறப்புச் சான்றிதழில் கரோனா நோய்த்தொற்றினால்தான் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம்!

முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் பெற்றுள்ளது.

'காவலர்களை அச்சுறுத்தும் விவகாரத்தில் மென்மையாக இருக்கப்போவதில்லை' உயர் நீதிமன்ற மதுரை கிளை!

கரோனா நோய்த் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக நடந்து கொள்ளாது என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

EXCLUSIVE: 'தமிழ்நாட்டில் நீட் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

எந்தக் காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டில் நீட் வரக்கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு என்றும் நீட் தேர்வு தமிழ்நாட்டில் வராமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

வீடு வீடாக ரேஷன் பொருள்கள் வழங்க அனுமதி கோரி மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்!

கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலைக்கு மத்தியில் வீடு வீடாக ரேஷன் பொருள்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாளை குவைத் செல்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை (ஜூன் 9) குவைத் செல்கிறார். அப்போது, இந்திய- வளைகுடா நாடுகளின் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆயுர்வேத சிகிச்சை கோரிய ஆசாராம் பாபு மனு தள்ளுபடி!

பாலியல் வன்புணர்வு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஆசாராம் பாபுவின் ஜாமின் மனுவை டெல்லி உச்ச நீதிமன்றம் ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details