தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்தி சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : May 8, 2021, 12:23 AM IST

ஆந்திர, தெலுங்கானாவிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - டெல்லி அரசு

ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் கட்டாயம் அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியின் அதே பேனா, இப்போது ஸ்டாலின் கையில்...

சென்னை: முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் கருணாநிதி பயன்படுத்திய அதே மாடல் பேனா மூலம் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பன்முகத் தன்மை கொண்ட வெ.இறையன்பு, கடந்து வந்த பாதை...

நிர்வாகத்தைப் பொறுத்தவரை இறையன்பு பணியாற்றாத பதவிகளே இல்லை. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐஏஎஸ் கடந்து வந்த பாதை..

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”- ஷில்பா பிரபாகர் சிறப்பு அலுவலராக நியமனம்!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறைக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய தலைமை செயலர்

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

'தெலங்கானாவில் முழு ஊரடங்கு கிடையாது' - கே.சி.ஆர் திட்டவட்டம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியாது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலைத்துவிடும் என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் விதிமீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும் - வழக்கறிஞர் புகார்!

நீலகிரி மாவட்டத்தில் வீதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வாக்குவாதம்?

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது: போலீஸ் விசாரணை!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பணை செய்த பெண் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை: தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details