'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' - ஓபிஎஸ், இபிஎஸ்
சென்னை: வாக்குக் கணிப்பு (எக்சிட் போல்) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம் என்றும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம்: இதுவரை 2.45 கோடி பேர் முன்பதிவு!
கோவின் தளத்தில் சுமார் 2.45 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களின் துயரக் குரலை ஒடுக்கக்கூடாது காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கோவிட்-19 தொடர்பாகப் பொது மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் துயரங்கள், தேவைகளையும் பதிவிடுவதைத் தடுக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'அரசின் அனைத்து கரங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன' பிரதமர் மோடி
கோவிட்-19 இரண்டாம் அலையை எதிர்கொள்ள அரசின் அனைத்து கரங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலை உதிர்ந்து சூரியன் உதிக்கும்! - ஈடிவி பாரத் சர்வே முடிவுகள்!
ஈடிவி பாரத் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 133 இடங்களையும், அதிமுக கூட்டணி 89 இடங்களையும், பிற கட்சிகள் 12 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.