தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 26, 2021, 7:24 PM IST

மழலைகளை மகிழ்விக்க வரும் ஈடிவி பால பாரத்...

ஈடிவி நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்படவுள்ள பால பாரத் தொலைக்காட்சி, மழலைகளை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கிறது.

ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் அழைக்காதது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைக்காததன் காரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம்' - அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை!

கரோனா தொற்றின் 2ஆவது அலை பரவலை தடுக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் (மே.1) ஊரடங்கை அமல்படுத்தலாம் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இன்று முதல் வங்கிகள் இயங்கும் நேரம் குறைப்பு

திருப்பூர்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் (ஏப். 26) வங்கிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், திருப்பூர்-ஊத்துக்குளி சாலை, எஸ்பிஐ வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

'பொள்ளாச்சியில் அனைத்துக் கட்சி முகவர்கள் கூட்டம்'

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் கைபேசி கொண்டு வரவும், மின்னணு கடிகாரம் அணிந்து வரவும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலக முகவர்கள் கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியானது புதிய கல்விக் கொள்கை!

புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மொழிகளின் மொழிப்பெயர்ப்பில் வெளியிடும்போது, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விதிகளை மீறும் ஆட்டோக்கள்: ஆட்சியரிடம் மனு அளித்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்!

நீலகிரி: கரோனா காலக்கட்டத்தில் உரிய அனுமதியின்றி அதிக தூரத்திற்கு இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

நாட்டில் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்வது குறித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியில் கோளாறு: ஆந்திராவில் 2 பேர் உயிரிழப்பு!

அமராவதி: விஜயநகர அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவர் உயிரிழந்தனர்.

இன்று முதல் திரையரங்குகள் மூடல்!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details