தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-top-ten-news-seven-pm
etv-bharat-top-ten-news-seven-pm

By

Published : Apr 25, 2021, 7:05 PM IST

முழு ஊரடங்கு: மதுபானம், கள் விற்ற பெண் உள்பட மூவர் கைது

ஈரோடு: முழு ஊரடங்கின் போது மதுபானம், கள் விற்பனை செய்த பெண் உள்பட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 250 மதுப்புட்டிகள், 100 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கில் ரயிலுக்காக பசியுடன் காத்திருக்கும் பிகார் மக்கள்

கோவை : இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வட மாநில மக்கள் பலர் ரயிலுக்காக குழந்தைகளுடன் பசியுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கிய பத்திரிகையாளர்கள்!

ஈரோடு: முழு ஊரடங்கின்போது பணியாற்றிவரும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனை சுகாதாரத் துறை பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், காவல் துறையினருக்கு பத்திரிகையாளர்கள் பிஸ்கட், தேநீர் வழங்கி கவுரப்படுத்தினர்.

பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய விசைப்படகு

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் விசைப்படகு மோதி விபத்துக்குள்ளானது

குஜராத்தில் கரோனாவை வென்ற தன்னம்பிக்கை பெண்மணி!

குஜராத் மாநிலத்தில் புற்றுநோய், நீரழிவு நோய்க்கு மத்தியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58 வயதான பெண், அதிலிருந்து மீண்டு பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

கேரளாவில் கரோனா போலி தகவல்களை தடுக்க சைபர் கண்காணிப்பு குழு

திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் கரோனா தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்புபவர்களைக் கண்காணிக்க கேரளாவில் 'சைபர் கண்காணிப்பு குழு' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு: மீண்டும் 2020க்கு திரும்பிய சாலைகள்

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுரை, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், கடலூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான போலி தகவல்கள் நீக்கப்படும் - ட்விட்டர் உறுதி

மத்திய அரசின் வலியுறுத்தலின்படி, கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான போலி தகவல்களை நீக்க ட்விட்டர் முடிவெடுத்துள்ளது.

சரத் பவாருக்கு மேலும் ஒரு மருத்துவ சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

சரத் பவாருக்கு வாயில் அல்சர் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

IPL 2021 CSK vs RCB: கடைசி ஓவரில் மஜா காட்டிய ஜடேஜா! ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டூ பிளேசிஸ், ஜடேஜாவின் அரைசதத்தால் சென்னை அணி 191 ரன்களை குவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details