தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : Feb 19, 2021, 7:13 PM IST

புத்தக கண்காட்சியில் புகுந்த பிக்பாஸ்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் மற்றும் ட்விட்டர் மூலம் தினமும் பரிந்துரை செய்யும் புத்தகங்கள் அனைத்தும் நடப்பாண்டு புத்தக காட்சியில் தனி அரங்கில் இடம்பெறும் என்று தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ரேசனில் வழங்கப்படும் அரிசி தரமில்லை; ஜோதிமணி எம்பியிடம் பொதுமக்கள் வேதனை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக கரூர் மக்களவை உறுப்பினரிடம் சாம்பட்டி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேதா இல்லத்தைப் பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவு நீட்டிப்பு!

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளையர்களால் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

செங்கல்பட்டில் நேற்று (பிப்.17) நள்ளிரவு, சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை வழிமறித்த கொள்ளையர்கள், ஓட்டுநர் சரவணனை சரமாரியாக வெட்டி கொள்ளையடிக்க முற்பட்டனர். இதனால், அவ்வழியே வந்த தனியார் நிறுவன பேருந்து ஒன்றும், ஆம்னி பேருந்து ஒன்றும் லாரியின் பின்புறம் நின்றன. அப்போது, அவைகளுக்கு பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பேருந்துகளின் மீது மோதியது. இதில், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேர்தல் யுத்தி! - கேரளாவை பின்பற்றும் கமல்!

சென்னை: தேர்தலில் கேரள இடது முன்னணி கையாண்டு வெற்றியடைந்த யுத்தியை மக்கள் நீதி மய்யமும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கையாள எண்ணியுள்ளது. அதற்காக சகாயம், பொன்ராஜ் உள்ளிட்டோருடன் கமல் ஹாசன் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. கமல் கையாளப்போகும் அந்த யுத்தி அவருக்கு வெற்றியை தேடித்தருமா?

சென்னையில் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்ட வங்கி அலுவலர் - திட்டமிட்டு கைது செய்த சிபிஐ!

சென்னை: வங்கிக் கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த அனுமதி வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் வங்கி அலுவலரை சிபிஐ அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் குறித்து கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், உற்சவங்கள் குறித்து விவாதிக்க பிப்ரவரி 22ஆம் தேதி, 45 மடாதிபதிகள் உள்ளிட்டோருடன் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் பழனிசாமி!

தென்காசி: கரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து!

கடலூர்: பண்ருட்டி அருகே தனியார் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details