தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - etv bharat top ten news seven am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.....

etv bharat top ten news seven am
etv bharat top ten news seven am

By

Published : Mar 18, 2021, 7:00 AM IST

ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டார்! - கோவை தங்கம் குற்றச்சாட்டு!

கோவை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தன்னை கைவிட்டதோடு துரோகமிழைத்து விட்டதாகவும் அக்கட்சியிலிருந்து விலகிய கோவை தங்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிகார் அனுபவத்தை வைத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்த ஆலோசனை : சத்யபிரதா சாகு தகவல்

கரோனா காலத்தில் பிகார் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், நத்தம் விஸ்வநாதன் வாக்காளருக்குப் பணம் அளித்தப் புகாரில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

'சதி செய்து தொகுதி மாற்றிவிட்டார்கள்' - ஓம்சக்தி சேகர் கண்ணீர்

புதுச்சேரி: எனது தொகுதியை சதி செய்து மாற்றிவிட்டதாக அதிமுக மேற்கு மாவட்ட செயலர் ஓம்சக்தி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்

தென் மண்டல ஐ.ஜி முருகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன் உள்ளிட்ட 10 காவல் உயர் அலுவலர்களை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

'தமிழ்நாடு ஓர் ஊழல் காடு' - பழ கருப்பையா

சென்னை: "தமிழ்நாட்டை 50 ஆண்டு காலத்தில் ஊழல் காடாக மாற்றி விட்டார்கள்" என மநீம வேட்பாளர் பழ கருப்பையா விமர்சித்துள்ளார்.

'63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா

சென்னை: "63 ஆண்டுகளாக கமல் ஹாசன் மக்களோடுதான் இருக்கிறார். மக்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே" என மநீம வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைக்க பரிசீலிக்கலாம் - நீதிமன்றம்

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்க தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏனாம் தொகுதிக்கு RX 100இல் பறந்த ரங்கசாமி

புதுச்சேரி : என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, இன்று ஏனாம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்

முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சதி செய்து தொகுதி மாற்றிவிட்டார்கள்' - ஓம்சக்தி சேகர் கண்ணீர்

புதுச்சேரி: எனது தொகுதியை சதி செய்து மாற்றிவிட்டதாக அதிமுக மேற்கு மாவட்ட செயலர் ஓம்சக்தி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details