தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Aug 6, 2021, 12:49 PM IST

ஆக. 15 பிறக்கும் நள்ளிரவில் பேரவையில் சிறப்பு விழா?

75ஆவது விடுதலை நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 15 பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு விழாவை நடத்த அரசு ஏற்பாடு செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளின் போராட்டக் களத்திற்குச் செல்லும் ராகுல்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்கு, நேரடியாகச் சென்று ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

'ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காடாக தொடரும்' - சக்திகாந்த தாஸ்

வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

'ஆசான் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து பேரவைக்குள் நுழைகிறேன்'

நாள்தோறும் எனது ஆசான் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து சட்டப்பேரவைக்குள் நுழைவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

ஐஐடி இடஒதுக்கீடு: ராம்கோபால் ராவ் குழு அறிக்கையை நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்த ராம் கோபால் ராவ் குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரிப்பதுடன், அங்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற உறுதி செய்ய வேண்டும் எனவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

'கரோனா காலத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - மகாராஷ்டிரா அரசு தகவல்

மகாராஷ்டிரா: கரோனா காலத்தில் இதுவரை 790 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் யஷோமதி தாகுர் தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டின் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு இன்று தொடங்கி நடந்துவருகிறது.

'வீட்டோட கலர் பிடிக்கல...' ஓட்டுநரை அறைந்த லக்னோ பெண் மேலும் ஒரு பஞ்சாயத்து!

கார் ஓட்டுநரை 22 முறை அடித்து வைரலான லக்னோ இளம்பெண்ணின் புதிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

'15 வயதுக்கு மேலுள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வு ஆகாது'

பதினைந்து வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details