தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்...

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Jul 15, 2021, 1:11 PM IST

சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா இன்று 100ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்- பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கரோனா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 8 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நவீன மீன் கடை திறப்பு

நெல்லை கிராப்ட் வளாகத்தில் மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் கடையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மேகதாது - கர்நாடகாவுக்கு எதிராக கண்டன தீர்மானம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நூற்றாண்டு காணும் சங்கரய்யா - பாமக நிறுவனர் வாழ்த்து

நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"நான் குடியரசுத் தலைவரா" - சரத்பவார் பதில்

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி புறப்பட்டு சென்ற நீா்வளத்துறை அமைச்சர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துகட்சி குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நாளை சந்திக்கிறது. இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

111 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு!

பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை!

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109க்கு விற்பனையாகிறது.

ABOUT THE AUTHOR

...view details